இதுவும் ஒரு காதல் கதை

sasirekha
1 min readDec 3, 2021

disclaimer: இது எனது முதல் தமிழ் வலைப்பதிவு, எழுத்துப் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் 🙏 .

இதுவும் ஒரு காதல் கதை

வித்தியாவின் தாயார் நேற்று காலமானார். அவள் கண்களில் கண்ணீர் வறண்டு போனது ஆனால் மனதின் வலி நீங்கவில்லை. வித்யாவின் தோழி சோகத்தை விட்டு வேலைக்கு வருமாறு அறிவுறுத்தினாள்.

வித்யா, தன் அம்மாவின் சூட்கேஸைத் திறந்தாள். அவளுக்கு ஒரு ஆணின் புகைப்படமும், பழைய டைரியும் கிடைத்தது . அவள் டைரியை படிக்கத் தொடங்கினாள், அவளுடைய தாயின் வலிமிகுந்த காதல் கதையை அறிந்தாள்.

அவள் வேலைக்காக சென்னை செல்ல வேண்டும். தன் உடைமைகளை அடுக்கினாள் . அவள் கைப்பையில் டைரி மற்றும் புகைப்படத்தை வைத்தாள். வித்யா கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் ரயிலில் ஏறினாள்.திருச்சியில் கிராசிங்கிற்காக ரயில் நிறுத்தப்பட்டது.அவள் உணவு வாங்க ரயிலில் இருந்து இறங்கினாள்.

கார்த்திக் தனது தந்தையின் வெற்றிகரமான வேலையைப் பற்றி நினைவு கூர்ந்தான்.அவன் தந்தை ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். அவன் தனது தந்தையின் தொழில்துறை குறிப்புகளைத் தேடியபோது, பையில் போஸ்ட் செய்யப்படாத ஒரு இங்கிலாந்து கடிதமும் , ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் கண்டான் .

கடிதத்தைப் படித்ததில், அவன் தந்தையின் சோகமான காதல் கதையைப் புரிந்துகொண்டான்.அவன் தந்தையின் கடைசி ஆசை, அவரது அஸ்தியை கன்னியாகுமரி கடலில் கரைக்க வேண்டும்.கார்த்திக் சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலில் ஏறினான். திருச்சியில் கிராசிங்கிற்காக ரயில் நிறுத்தப்பட்டது.அவன் தண்ணீர் வாங்க ரயிலில் இருந்து இறங்கினான்.

கூட்டத்தில் ஒரு பெண் அவன் மீது மோதினாள்.அவள் பையில் இருந்து ஒரு புகைப்படம் கீழே விழுந்தது. அந்த புகைப்படத்தில் தனது தந்தையின் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தான். அவன் தன் கைப்பையில் இருந்த இங்கிலாண்ட் லெட்டர் மற்றும் புகைப்படத்தை வித்யாவிடம் கொடுத்தான் .

இருவரும் விஷயங்களை உணர்ந்து புரிந்து கொண்டனர். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று வித்யா கூறினாள் .அதையே கார்த்திக் கூறினான் . இருவரும் நண்பர்களாக இருக்க ஒப்புக்கொண்டனர்.இருவரும் கைகுலுக்கி, தங்கள் பாதையில் பிரிந்து சென்றனர்.

மீண்டும் சந்திப்போம் -சசி

--

--

sasirekha

I’m a Data Engineer. Love sharing ideas and thoughts :)